வடமதுரை:பி.கொசவபட்டி ஊராட்சி எட்டிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா 21. இவருக்கும் பாலப்பட்டி மூர்த்திக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்து 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மஞ்சுளா எட்டிகுளத்துப்பட்டியில் தந்தை அழகர்சாமியுடன் வசித்தார். சில நாட்களுக்கு முன்னர் மகளை வீட்டில் விட்டுவிட்டு மஞ்சுளா மாயமானார்.இதேபோல கொம்பேறிபட்டியைச் சேர்ந்த 16 வயது பெண் ஆத்தூர் அருகே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். ஜன.14ல் கொம்பேறிபட்டி வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்ப வரவில்லை. மாயமான இருவரையும் வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.