குழாயை திறந்தால் 'கழிவு' கொட்டுது! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
குழாயை திறந்தால் 'கழிவு' கொட்டுது! மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் ரோடு, கருவம்பாளையம் பகுதியில் குமரன் அவென்யூ குடியிருப்பு பகுதி உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதிக்கும், அதையடுத்துள்ள ஜெகநாதன் லே அவுட் பகுதிக்கும் பூச்சக்காடு மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.


சில நாட்களாக இப்பகுதியில் வினியோகம் செய்யும் குடிநீர் கடும் துர்நாற்றமும், நீரில் மஞ்சள் நிறமும் காணப்பட்டது.இதுகுறித்து அதிர்ச்சி யடைந்த அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.ஆய்வு செய்த போது, ஒரு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பது தெரிய வந்தது.ஊழியர்கள் அதை சரி செய்தனர்.தகவல் அறிந்து அப்பகுதியினர் தங்கள் வீடுகளில் சேகரித்து வைத்திருந்த குடிநீர் முழுமையாக வெளியேற்றி, தொட்டிகளை சுத்தம் செய்து பயன்படுத்தினர்.வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வந்த நிலையில் இடையில் அப்பகுதியினர் லாரியில் தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தினர். அதன் பின் கடந்த வாரம் குடிநீர் சப்ளை செய்த போதும், இதே பிரச்னைஏற்பட்டது.
சோதனை செய்த போது மேலும் ஒரு இடத்தில் பாதாள சாக்கடை உடைந்து குடிநீர் குழாயில் கலப்பது தெரிந்தது. மீண்டும் தொட்டிகளிலிருந்த தண்ணீர் வெளியேற்றி, சுத்தம் செய்து, லாரியில் தண்ணீர் வாங்கினர்.நேற்று காலை மீண்டும் குடிநீர் சப்ளை செய்த போது, மீண்டும் கழிவு கலந்து வந்தது. மற்றொரு இடத்தில் துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் குடிநீர் வந்தது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ''கடந்த மாதம் இப்பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பதிப்பு பணி நடந்தது. ஏற்கனவே உள்ள குழாய்கள்பகுதியில் 4வது திட்டக்குழாய் என புதிய குழாய் பதித்தனர். இதில் பல இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய்கள் சேதமாகியுள்ளது.குடிநீர் பணியாளர்கள், எத்தனை தரம் சரி செய்வது என பின் வாங்குகின்றனர்.
குழாய் பதிப்பு செய்த தரப்பு எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நீயா, நானா என்ற இவர்களது மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதாள சாக்கடை இணைப்புகளில் ஏற்பட்ட சேதம் சரி செய்து, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவு நீர் கலந்து குடிநீர் வினியோகித்து மக்கள் உடல் நலத்துடன் மாநகராட்சி விளையாடுவது கண்டிக்கத்தக்கது'' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X