தேனி மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் மாதந்தோறும் 526 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். ஜனவரிக்கான பொருட்கள் முன் நகர்வாக டிச. 22 முதல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினர். இதில் 60 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத பொருட்களே வழங்கப்பட்டது. இதில் அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜன. 3 முதல் 8 ம்தேதி வரை வழங்கினர். அதன்பின் வழக்கமாக வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வில்லை. அடுத்தடுத்து மிக குறைவாக 22 சதவீத அளவே வழங்கப்பட்டது. குறைந்த ஒதுக்கீடு கடைகளுக்கு வழங்கியதால் 42 சதவீத கார்டுதார்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அதன்பின் வரும் மக்களுக்கு பொருட்கள் இல்லை வந்தவுடன் வழங்கப்படும் என்கின்றனர். இதில் பல கடைகளில் விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.குறைந்த வேலை நாட்கள்நுகர்பொருள் வாணிப கழகம் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்யாததால் இதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜனவரி முடிய 8 நாட்களே உள்ளது. இதில் 2 ஞாயிறு ஊரடங்கு, குடியரசு தின விடுமுறை 3 நாட்கள் போக 5 நாட்கள் மட்டுமே உள்ளன. இதில் 58 சதவீத கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டத்திற்கு மாதந்தோறும் 5600 டன் அரிசி, 510 டன் சர்க்கரை, 330டன் பருப்பு, 3.50 லட்சம் லிட்டர் பாமாயில் வழங்கப்படும். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொங்கல் பொருட்கள் குடோனில் இருப்பு வைத்ததால் அத்தியாவசிய பொருட்களுக்கு இடமில்லை.அதனால் தாமதம் ஆனது. தற்போது வரை 3200டன் அரிசி சப்ளை ஆகிவிட்டது. 25ம் தேதி முதல் விரைவுபடுத்தி வழங்கிவிடுவோம்' என்றார்.