ஆண்டிபட்டி :அகில இந்திய பா.பி., வல்லரசு கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டிபட்டியில் மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டைச்சாமி தலைமையில் நடந்தது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை (ஜன.23) தேசபக்தி நாளாக அறிவித்தும், டில்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு கிரானைட் கற்களால் பிரம்மாண்ட சிலை அமைக்கவும் ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், நேதாஜி பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் மாரிஸ், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய தலைவர் தன பாண்டியராஜன் நன்றி கூறினார்.