பெரியகுளம்: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய பி.டி.ஓ., சேது குமார் தேனி கலெக்டர் அலுவலகம் வளர்ச்சி பிரிவின் மேலாளராக மாற்றப்பட்டார். பல நாட்களாக பி.டி.ஓ., நியமிக்கப்படவில்லை. விரைவில் பணியிடம் நிரப்ப வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந் நிலையில் தேனி கலெக்டர் அலுவலகம் வளர்ச்சிப் பிரிவு மேலாளராக பணியாற்றிய மோனிகா, பெரியகுளம் பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.