ஆண்டிபட்டி,:தமிழ்நாடு சாலியர் சங்கம், டி.சுப்புலாபுரம் சாலியர் சமூக சங்கம் சார்பில் டி.சுப்புலாபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 8 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.சுப்புலாபுரம் சாலியர் இளைஞர் அணி முன்னிலையில் சமுதாய துணைத்தலைவர் முத்தையா ரூ.300 வீதம் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கினார். தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்படும் சாலியர் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைத்தலைவர் தெரிவித்தார்.