பெரியகுளம்: பெரியகுளத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களிடம் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார்.பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பெரியகுளம் நகரம், பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நேற்று நேர்காணலை துவங்கினார். இதில் ரவீந்திரநாத் எம்.பி., தேனி மாவட்ட செயலாளர் சையது கான்,சிறுபான்மை மாவட்ட செயலாளர் அபுதாஹிர், ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகரச் செயலாளர் ராதா, துணைச் செயலாளர் அப்துல் சமது உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரியகுளம் நகராட்சி, தென்கரை, தாமரைக் குளம்,வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புவோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.