போடி: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போடி பஸ்ஸ்டாண்டிலிருந்து - திருமலாபுரம் வழியாக சாலை காளியம்மன் கோயில் வரை பைபாஸ் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் தேனி -- மூணாறு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கடல்மட்டத்திலிருந்து 4644 அடி உயரத்தில் அமைந்துள்ள போடிமெட்டு ,குரங்கணி, டாப் ஸ்டேஷன் பகுதிகளுக்கு செல்லும் வழியாக போடி மெயின் ரோடு அமைந்துள்ளது. தினமும் இருமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.வாகன நெரிசல் போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் பிளாட்பார கடைகள் , கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளதால் 60 அடியாக இருந்த மெயின் ரோடு 30 அடி ரோடாக சுருங்கியுள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து பி.ஹைச் ரோடு - திருமலாபுரம் வரை நகராட்சி 8ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு கண்துடைப்பாக நடந்தது. மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை ஒத்துழைப்பு இல்லாததால் ரோடு குறுகியது. பி.ஹைச்., ரோட்டில் ரோட்டை ஆக்கிரமித்து இரவில் பிளாட்பார கடைகளும், அதே பகுதியில் லாரிகளை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போடி- தேனி செல்ல போடி பஸ்ஸ்டாண்டிலிருந்து - திருமலாபுரம் வழியாக சாலை காளியம்மன் கோயில் வரை ரோட்டை அகலப்படுத்தி பைபாஸ் ரோடு அமைப்பதன் மூலம் நெரிசலை தவிர்க்கலாம் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. போலீஸ் பற்றாக்குறைபோக்குவரத்தை முறைப்படுத்த டிராபிக் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பலரும் மாற்று பணிக்கு சென்றதால் தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, உட்பட 6 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியவில்லை.மாற்று வழிகள் பஸ்ஸ்டாண்டிலிருந்து கேரளா, நெடுங்கண்டம், மூணாறு செல்லும் வாகனங்கள் ஸ்டேட் பாங்க் ரோடு, வஞ்சி ஓடை ரோட்டை பயன்படுத்தலாம். ஸ்டேட் பாங்க் ரோட்டில் பள்ளி நேரங்களில் செல்ல கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்.பைபாஸ் ரோடு அவசியம் பி.பாலமுரளி சமூக ஆர்வலர், போடி: காமராஜ் பஜார், பி.ஹைச், ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் ரோடு சுருங்கியுள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து பி.ஹைச். ரோடு வழியாக தேனி செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நெரிசலை தவிர்க்க போடி பஸ் ஸ்டாண்டிலிருந்து திருமலாபுரம் வழியாக சாலைக்காளியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்பு அகற்றி பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும்.கிராமங்கள் பயன்பெறும்பி கண்ணன் சமூக ஆர்வலர் போடி : போடி காமராஜ் பஜார் பெரியாண்டவர் ஹை ரோடு பழைய பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். பஸ்ஸ்டாண்டிலிருந்து வ.உ.சி., சிலை ரோடு, திருமலாபுரம் சாலை காளியம்மன் கோயில் வரை ரோட்டை அகலப்படுத்தி பாலம், ரோடு வசதி செய்திட வேண்டும். தொலை நோக்கு பார்வையாக பைபாஸ் ரோடு அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். வர்த்தகம் வளர்ச்சி அடைவதோடு, திருமலாபுரம், மேலச்சொக்கநாதபுரம், பத்ரகாளிபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைவார்கள்.