கம்பம்,:கோகிலாபுரத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் ஊராட்சியில் சில ஆண்டுகளாக இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த முன்னாள் எஸ்.பி. கோகிலாபுரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கஉத்தரவிட்டார். இதற்கென சமுதாய கட்டடத்தை வழங்கினார்கள். அதில் புறக்காவல் நிலைய பெயர் பலகை வைத்து வசதிகள் செய்யப்பட்டது. ஆனால் இங்கு போலீசார், அதிகாரிகள் நியமிக்கவில்லை. புறக்காவல் நிலையம் பூட்டியே உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்கு மீண்டும் இரு சமூகத்தினர் கல்வீசி தாக்கி கொண்டனர். இனியாவது புறக்காவல் நிலையம் முழுமையாக செயல்பட உத்தரவிட வேண்டும். குச்சனூர், சுருளிப்பட்டியிலும் புறக்காவல் நிலைய அறிவிப்புகள் கிடப்பில் உள்ளது.