மூணாறு: கேரள கலாச்சார மையமான லலிதகலா அகாடமி, தென்னக பண்பாட்டு மையம் சார்பில் மூணாறில் தேசிய அளவிலான ஓவியம் தீட்டும் முகாம் ஐந்து நாட்கள் நடந்தது.மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச் சூழலில் ஓவியர்கள் சித்திரங்களை தீட்டினர்.தமிழக ஓவியர்களான தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் குமரேசன், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அபிராமி, பொள்ளாச்சியைச் சேர்ந்த சத்தியநாராயணன், சென்னையைச் சேர்ந்த ரோஹினி மணி, புதுச்சேரியைச் சேர்ந்த இளமுருகன், அன்பழகன் உள்பட கேரளா, கர்நாடகாமாநிலங்களைச் சேர்ந்த 20 ஓவியர்கள் தங்களின் எண்ணங்கள் துாரிகை வாயிலாக பல்வேறுவண்ணங்கள் மூலம்பிரதிபலித்தனர்.ஒருவர் தலா 2 ஓவியங்களை தீட்டினர். அவை கேரள லலிதகலா அகாடமிக்கு கொண்டு செல்லப்பட்டு ஓவிய கண்காட்சிகளில் இடம் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.