போடி:போடியில் ஸ்பைசஸ் போர்டு சார்பில் பண்ணை மகளிர், தொழில் முனைவோருக்கான நறுமண பொருட்களில் மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் முதுநிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை உதவி அலுவலர் கருப்பசாமி, போடி வடக்குமலை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் உமாமகேஸ்வரி, கலசலிங்கம் தோட்டக்கலை கல்லூரி இளங்கலை மாணவர்கள் இன்பராஜா, அய்யனார், ஸ்ரீதர், காவியமுகிலன், ஜெகன்பிரகாஷ், விஜயரகுநாத், உதவி பேராசிரியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.