தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெரு முத்துபிரகாஷ் 24, மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இவர் 3 நாட்களுக்கு முன்பு மண்வெட்டியால் தாக்கப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆனந்த், சுப்பையன், சுப்புராஜ் ஆகியோர் மீது அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த முத்து பிரகாஷ் கலெக்டர் அலுவலக வாசலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டனர். இதுபற்றி முத்து பிரகாஷ் கூறுகையில், ''என்னை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன்'' என்றார்.