தேனி:போடேந்திரபுரத்தில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் ராஜசிம்மன். இவர் பழநி பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவருக்கும், தேனி முத்துதேவன்பட்டியை சேர்ந்த செல்வபிரியா 27 என்பவருக்கும் 2021 செப்., திருமணம் நடந்தது. ராஜசிம்மன் தனது மனைவி, பெற்றோருடன் பழநி பட்டாலியன் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.இந்நிலையில் செல்வபிரியாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவர் தனது தாய் வீட்டில் உள்ளார். இந்நிலையில் கணவர் ராஜசிம்மன், மாமனார் ஈஸ்வரன், மாமியார் கொடியரசி, ராஜசிம்மன் சகோதரர் சிலம்பரன், கணவரின் தாய்மாமா கண்ணன், சத்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். நேற்று விசாரணைக்கு வந்த செல்வபிரியா கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.---