குரூப் 2, 2ஏ மற்றும் 4 தேர்வுகள் தள்ளிப்போகுமோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
00:19


மத்திய, மாநில அரசு துறைகளில் பணியாளர் நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் சரிவர நடத்தப்படவில்லை. யு.பி.எஸ்.சி., தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் மட்டுமே கொரோனா குறைந்தபோது நடத்தப்பட்டன.தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் கல்லுாரி மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வுகள் நடத்த உத்தரவிட்டுள்ளனர்.இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடித் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தாண்டு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். தமிழ் பாடத்தில் தேர்வு, தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை எனவும் அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்து வருகின்றனர்.ஆனால் அதிகரித்து வரும் கொரோனா இந்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா 3ம் அலை, ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுஊரடங்கு அமலாகியுள்ளது. மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்தால் இந்த ஆண்டும் அரசு வேலை கானல் நீராகிவிடுமோ என புலம்புகின்றனர். ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் கடந்த ஆண்டில் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இதில் குறைவான தேர்வாளர்களே பங்கேற்றனர். ஆனால் குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகளில் பல லட்சம் பேர் பங்கேற்பர் என்பதால், அதனை நடத்துவது சிரமம். இத்தேர்வுகளுக்கு பஸ், ரயில் சேவை வசதி வேண்டும். இதனால் கொரோனா நேரத்தில் தேர்வு நடத்த அரசு தயங்குகிறது. பிப்ரவரியில் குரூப் 2, 2ஏ மற்றும் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்தது இந்நிலையில் 2 வாரங்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்தால்தான் தேர்வு சாத்தியம் என்ற நிலை உள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X