வடமதுரை: அய்யலூர் தங்கம்மாபட்டியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இங்கு குப்பாம்பட்டி ராஜேந்திரன், கருப்பையா, முருகன், காளியப்பன், சின்னச்சாமி உள்ளிட்ட 7 பேர் பூஜாரிகளாக இருந்தனர்.இவர்கள் முறையாக பூஜை செய்வதில்லை என்ற புகாரை தொடர்ந்து 7 பேரை கோயில் பூஜை செய்தல், கிடா வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட கூடாது என ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். மேலும் முருகேசன் என்பவரை பூஜாரியாக நியமித்தார்.இந்நிலையில் நீக்கப்பட்ட 7 பூஜாரிகளும் முருகேசனை பூஜை செய்ய விடாமல் தடுத்தனர். கோயிலுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளையும் பணி செய்ய விடாமல் மிரட்டினர். செயல் அலுவலர் மாலதி புகாரில் வடமதுரை போலீசார் ராஜேந்திரன், கருப்பையா, உள்ளிட்ட 7 பூஜாரிகள் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.