நெய்க்காரப்பட்டி:பழநி அருகே பாப்பம்பட்டி நெய்க்காரப்பட்டி பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் எனக் கூறி வியாபாரிகளை மிரட்டிய மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.பழநி அருகே பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். தான் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறியுள்ளார். அங்கு கடைகளில் பொருட்களை ஆய்வு செய்வதாக கூறியவர், கடைகளின் உரிமம் குறித்து கேட்டுள்ளார்.அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலர் உணவு பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். கடைக்காரரிடம் இதுபோன்ற மர்ம நபர் வரும்போது, பிடித்து வைத்து அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.