ஒட்டன்சத்திரம்: கொரோனோ தொற்று வேகமாக பரவி வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கோயில்களில் வழிபட தடை உள்ளது. இந்நிலையில் பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்கு ஏராளமான பக்தர்கள் பல மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்தாண்டு கொரோனா தொற்று பரவி வருவதால் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்குள் செல்ல அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது.இதனால் மற்ற நாட்களில் முருகனை வழிபடலாம் என்ற எண்ணத்தில் தைப்பூசம் முடிந்தபின்பும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி செல்வது தொடர்கிறது. இவ்வாறு செல்வோர் ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பர் கோயிலில், சுவாமியை தரிசிக்காமல் செல்வதில்லை.நேற்று சனிக்கிழமை என்பதால் கோயிலில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இருந்தபோதிலும் பாதயாத்திரை பக்தர்கள் கோயில் வாசலுக்கு வெளியே சூடம் கொளுத்தி வழிபட்டுச் சென்றனர்.