வெள்ளகோவில்:வெள்ளகோவில், மூலனுார் ரோடு, சொரியங்கிணற்றுப்பாளையம் பிரிவில் வசிப்பவர் பழனிசாமி; ஓய்வு பெற்ற ஆசிரியர்; மனைவி விஜயராணி; ஓய்வு பெற்ற பின்பு தினசரி மதியம் வரை, பழனிசாமி ஜோதிடம் பார்த்து வந்தார்.கண்ணுக்கு சிகிச்சை மேற்கொண்டதால், 20 நாளுக்கும் மேலாக ஜோதிடம் பார்ப்பதில்லை. கடந்த 20ம் தேதி, மர்ம ஆசாமி ஒருவர், பழனிசாமி, விஜயராணி ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி, கொன்று விடுவேன் என மிரட்டி, கொள்ளையடிக்க முயற்சித்தார்.
தம்பதி கூச்சலிட்டதால், வெளியே நின்ற வாலிபருடன் பைக்கில் ஏறி மர்ம ஆசாமி தப்பினார். வெள்ளகோவில் போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.நேற்று மதியம் மாவட்ட எஸ்.பி., செஷாங் சாய் குற் றச் சம்பவம் நடந்தது எவ்வாறு என்று தம்பதியிடம் விசாரணை நடத்தினார். டி.எஸ்.பி., குமரேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, எஸ்.ஐ., ஜெயக்குமார் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய 7 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.