மேலுார்,:மேலுார் பேப்பனையம்பட்டி சோம சுந்தர விநாயகர் கோயிலில் 2ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. அறங்காவலர் சோமசுந்தரம் வரவேற்றார். கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்தார். எம்.பி., வெங்கடேசன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தையா, சி.இ.ஓ., சுவாமிநாதன், மாவட்ட நுாலக அலுவலர் யசோதா, கல்வி அலுவலர் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. நிர்வாகி கணேசன் நன்றி கூறினார்.