மதுரை:மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல் கூறியதாவது:ஜல்லிக்கட்டை ரசிக்க அலங்காநல்லுாரில் அரங்கு அமைக்க திட்டமிட்டது, பாரம்பரிய காளை இனங்களின் அருங்காட்சியகம் அமைக்க உள்ளது வரவேற்கத்தக்கது. மதுரை விமான நிலையம் சர்வதேச நிலைக்கு உயர்த்த கோரும் எங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு இந்த அரங்கு உதவும்.போக்குவரத்தை சீர்படுத்த புதிய மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட மதுரை திட்டங்கள் பாராட்டுக்குரியது. மதுரை நகர வளர்ச்சி குழுமத்தை உருவாக்கியதன் மூலம் சென்னை போல மதுரையும் வளர்ச்சி பெறும். புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதால் வேளாண் உணவுத்தொழில் வளர்ச்சியில் மேம்பாடு காணும். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு பாராட்டுக்கள் என்றார்.