உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே மேல வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மாயி, -ஒச்சம்மாள் தம்பதியர். மலையடிவார தோட்டத்தில் கொட்டம் அமைத்து 30 ஆடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று திடீரென ஆடுகள் சத்தம் போட்டதால் கொட்டத்தை திறந்து பார்த்த போது 15 ஆடுகள் இறந்து போயின. நாய் அல்லது ஏதாவது விலங்கு கடித்ததா என தெரியாத நிலையில் வனத்துறை, வருவாய்த் துறையினரிடம் புகார் செய்துள்ளனர்.