தியாகிகளின் துன்பத்தை நிர்வாகத்திலுள்ளவர்கள் உணர வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
00:58

மதுரை:சுதந்திரத்தின் இலக்கை அடைய ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரும் செய்த தியாகம் மற்றும் அடைந்த துன்பத்தை நிர்வாகத்திலுள்ளவர்கள் உணர வேண்டும். தியாகி மனைவிக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் அண்ணாநகர் சொர்ணம் தாக்கல் செய்த மனு:எனது கணவர் முத்தையா. இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.,) சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பர்மாவில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் 1945ல் அடைக்கப்பட்டார். உடன் சிறையிலிருந்த சக கைதிகளில் ஒருவரான ராஜூ சான்றிதழ் அளித்துள்ளார். கணவர் 1991ல் இறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சொர்ணம் குறிப்பிட்டார். நீதிமன்ற கதவைத் தட்டுதல்நீதிபதி சி.வி.கார்த்திகேயன்: மனுதாரரின் கணவர் இந்திய தேசிய ராணுவத்தில் சிப்பாயாக இருந்துள்ளார். மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கீழ் பணியாற்றிய தனது கணவரின் சேவையை அங்கீகரிக்கக்கோரி ஒரு விதவைப் பெண் இந்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளார்.தேச நலனுக்காக மனுதாரரின் கணவர் பாடுபட்டார் என்ற உண்மையை அங்கீகரித்து மாநில அரசு ஓய்வூதியம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் குடும்ப ஓய்வூதியத்திற்காக மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். மனுதாரரின் கணவர் பர்மா சிறையில் 1945 மே முதல் 1945 டிச.,இறுதி வரை சிறைவாசம் அனுபவித்ததாக சக கைதி ராஜூவின் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1945 ஏப்., முதல் 1946 பிப்.,வரை சிறைத்தண்டனை அனுபவித்ததாக மனுதாரர் கூறுகிறார். தமிழக அரசின் பதிவுச் சான்று இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.நியாயமற்றதுராஜூவின் சான்றிதழை ஏன் நிராகரித்தனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. தான் சிறையில் இருந்த காலகட்டத்தில் மனுதாரரின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மைச் சான்றிதழை ராஜூ வழங்கியிருப்பதைக் கவனமாக ஆராய்ந்தால் தெரியவரும். மனுதாரர் கூறுவதில் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கவில்லை. ராஜூ அளித்த சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுப்பியது நியாயமற்றது.சுதந்திரப் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட வீரர்களுடைய விதவைகளின் நிலை குறித்து சிறிதளவு அக்கறை, புரிதல் இருந்திருந்தால், மாநில அரசிடம் நேரடியாக விளக்கம் கேட்டிருக்க முடியும்.தியாகம்சுதந்திரத்தின் இலக்கை அடைவதற்கான ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரரும் செய்த தியாகம் மற்றும் அவர்கள் அடைந்த துன்பத்தை நிர்வாகத்திலுள்ளவர்கள் உணர வேண்டும். அந்த வீரர்களின் விதவைகளை குறைந்தபட்சம் அங்கீகரிக்கும் வகையில் அதிகாரிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். ராஜாக்களின் சகாப்தம் முடிந்துவிட்டது.தற்போது நவீனகால அதிகாரவர்க்கத்திடம் சிக்கிக் கொண்டு சிரமப்படும் இத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயராஜ்யம் வழங்கபட வேண்டும்.ஓய்வூதியம் மறுத்த மத்திய உள்துறை (தியாகிகள் பிரிவு) சார்பு செயலாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஓய்வூதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X