தென்மாவட்டங்களுக்குள் கொரோனா பரவலில் போட்டி: மதுரையை முந்திய திருநெல்வேலி, கன்னியாகுமரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
01:04


மதுரை:மதுரை உள்ளிட்ட எட்டு தென் மாவட்டங்களில் கன்னியாகுமரியில் கொரோனா புதிய ஒருநாள் தொற்று 1266 ஆக அதிகரித்துள்ளது. மதுரையை அடுத்து திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.மதுரையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று பரவல் பாதியாக குறைந்தது. நேற்று மட்டும் 565 பேர் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் கன்னியாகுமரியில் தொற்றின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று 1266 பேர் பாதிக்கப்பட்டனர். திருநெல்வேலியில் 828, விருதுநகர் 529, தேனி 477, துாத்துக்குடி 351, ராமநாதபுரம் 229, திண்டுக்கல் 166, சிவகங்கை 124 பேர் என எட்டு மாவட்டங்களில் ஒரே நாளில் பாதிப்பு 4535 ஆக எகிறியது. 5 பேர் இறந்தனர். மருத்துவமனைகளில் மொத்தம் 24ஆயிரத்து 738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தொற்று பாதிப்பில் திருநெல்வேலி 25.3, கன்னியாகுமரி 2.7, மதுரை 12.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. மதுரையில் தற்போது 2199 ஆக்சிஜன் படுக்கைகளில் 54, 676 சாதாரண படுக்கைகளில் 328, 676 ஐ.சி.யு. படுக்கைகளில் 78 பேர், 1984 கோவிட் படுக்கைகளில் 113 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கன்னியாகுமரியில் 251 பேர், திருநெல்வேலியில் 104 பேர் ஆக்சிஜன் வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். இரண்டாம் அலையுடன் ஒப்பிடும் போது தொற்று வேகமாக பரவினாலும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் குறைந்துள்ளனர். நோயாளிகள் விரைவாக குணமடைவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பெரும்பாலும் காலியாக உள்ளன. விடுமுறைகளால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது, இனிவரும் நாட்களில் வேகம் குறையவாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X