இந்நகர் பெருங்குடி மண்டலம், தாம்பரம் மாநகராட்சி எல்லையாகவும் அமைந்துள்ளது.அந்நகரின் பிரதான சாலை, பெருங்குடி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல்லாவரம் நகராட்சியாக இருந்தபோது, அதேசாலையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.பாதாள சாக்கடையின், 'மேன் ஹோல்'கள் சாலையில் இருந்து ஐந்தடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அடைப்பு ஏற்பட்டால், சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் பீறிட்டு வெளியேறும்.கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி சாலையில் சங்கமித்து உள்ளன. தொடர் மழை, கழிவு நீர் என மாதக்கணக்கில் சாலை தண்ணீரில் ஊறி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.பெருங்குடி மண்டலம் சார்பில், சாலைக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், கழிவு நீர் அடைப்பை சரி செய்யாததால், மாநகராட்சியினரால் சாலை அமைக்க முடியாமல் தவிக்கின்றனர்.இது ஒருபுறம் இருக்க, சாலையில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் கொசுத் தொல்லை, பல்வேறு உபாதைகளுக்கு உட்பட்டு தவித்து வருகின்றன.கோரிக்கைசம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், முதல்வரின் தனி பிரிவு மற்றும் 'ஆன்-லைன்' வாயிலாகவும் தொடர்ந்து புகார் அளித்தும், 'மேன் ஹோல்' இருப்பு இல்லாததால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.சம்பந்தப்பட்ட துறையினர் கழிவு நீர் அடைப்பை சரி செய்து முறையான, 'மேன்-ஹோல்' அமைத்து சாலை புனரமைக்க வழிவகை செய்ய வேண்டும். அதனுடன் இப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துஉள்ளது.
-- நமது நிருபர்- -