பிளம்பரை கடத்திய மூவர் எம்.ஜி.ஆர்., நகரில் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
பிளம்பரை கடத்திய மூவர் எம்.ஜி.ஆர்., நகரில் கைது
Added : ஜன 23, 2022 | |
Advertisement
 

எம்.ஜி.ஆர்., நகர் : இருசக்கர வாகனத்திற்கு மாத தவணை கட்டாதவருக்காக, அவரை அறிமுகம் செய்து வைத்த பிளம்பரை ஆட்டோவில் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.



பண நெருக்கடிசென்னை, நெசப்பாக்கம், மஞ்சு கார்டன், பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜா, 26; பிளம்பர். சில ஆண்டுகளுக்கு முன், மாங்காடு, பரணிபுத்துார் பகுதியில் வசித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 28, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெங்கடேசனுக்கு பண நெருக்கடி இருந்ததால், மாத தவணை செலுத்தி வரும் தன்னுடைய இருசக்கர வாகனத்தை விற்க முடிவு செய்தார்.

இதையடுத்து, ராஜா மூலமாக, ராஜாவின் நண்பரான எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு வாகனத்தை விற்று, மீதி தவணையை முருகன் கட்ட வேண்டுமென பேசியுள்ளனர்.ஆனால், 9 மாதங்களாக முருகன் மாத தவணை செலுத்தாததால், பணத்தை செலுத்துமாறு வெங்கடேசனுக்கு, பைனான்சியர் நெருக்கடி கொடுத்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேசன், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களோடு நெசப்பாக்கம் சென்று, முருகனை அறிமுகம் செய்து வைத்த ராஜாவை, ஆட்டோவில் கடத்திச் சென்றார்.

இதைப் பார்த்த ராஜாவின் மைத்துனர் மணி என்பவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். மாங்காடு ரோந்து போலீசார், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ராஜாவை மீட்டனர்.பறிமுதல்ராஜாவை கடத்திய மாங்காடைச் சேர்ந்த வெங்கடேசன், 28, பரத் 22, அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.இவர்கள், எம்.ஜி.ஆர்., நகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X