தற்கொலை, பலி | சென்னை செய்திகள் | Dinamalar
தற்கொலை, பலி
Added : ஜன 23, 2022 | |
Advertisement
 

ஏணியில் இருந்து விழுந்தவர் பலி

குரோம்பேட்டை: ஜாபர்கான்பேட்டை, வீதியம்மன் கோவில், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார், 35; 'ஏசி' மெக்கானிக். இவருக்கு மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தை உள்ளது. வேலையில்லாத காரணத்தால், உறவினருடன் பெயின்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

குரோம்பேட்டை, சோழவரம் நகரில், நேற்று முன்தினம் அடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஏணி மூலமாக கீழே இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அருண்குமார், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.

குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.இளம்பெண் தற்கொலைஎண்ணுார்: எண்ணுாரைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு காவியா, 17, உள்ளிட்ட இரு மகள்கள் உள்ளனர். பிளஸ் ௨ முடித்து, வீட்டில் இருந்த காவியா, நேற்று முன்தினம் காலை தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார்.

மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பிய அவரை, பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவி பிரிந்ததால் கணவர் விபரீதம்திருவொற்றியூர்: திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 38; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.

சக்திவேலின் குடிப்பழக்கத்தால், தம்பதியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன், தம்பதியிடையே சண்டை ஏற்பட்டு, மனைவி கோபித்து, மகனுடன் பெங்களூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். மனமுடைந்த சக்திவேல், துாக்கிட்டு தற்கொலை செய்தது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது.

சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவி தற்கொலைதிருவொற்றியூர்: திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் பூமாலை, 18. பிளஸ் 2 வரை தேனியில் படித்த பூமாலை, கல்லுாரிப் படிப்பை திருவொற்றியூரில் படித்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

உடலைக் கைப்பற்றி, திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். இதில், பூமாலை தேனியில் படிக்கும் போது, உறவினர் மகன் ஒருவரை காதலித்துள்ளார். நேற்று முன்தினம் மொபைல் போனில் நாளை ஊருக்கு வருவதாக வாலிபருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்தவர், துாக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும், தன் சாவிற்கு யாரும் காரணம் இல்லை என, எழுதி வைத்த துண்டு சீட்டும் சிக்கியுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X