முத்தியால்பேட்டை : முத்தியால்பேட்டையில், மின் பெட்டியில் பழுது பார்த்த போது, மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பலியானார்.காஞ்சிபுரம் மாவட்டம், பாலுார் காலனியைச் சேர்ந்தவர் அருள்பதி, 30; மண்ணடி, தம்பு செட்டி தெருவில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கச்சாலீஸ்வரர் கார்டன், ஜீல்ஸ் தெருவில் உள்ள மின்பெட்டியில் நேற்று பழுது ஏற்பட்டது. அதை சரி செய்ய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து அருள்பதி உயிருக்கு போராடினார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.