சென்னை : அரசு வேலை வாங்கித் தருவதாக, 4 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி உட்பட நால்வரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம், முளச்சூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திர பிரபு, 51. இவரது மனைவி சசிபிரியா, 43. இவர்கள், 50க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
அதேபோல, பள்ளிக்கரணை, நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 23. இவர் மீது, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், கொலை முயற்சி உட்பட, 7 வழக்குகள் உள்ளன. மாதவரம் அருகே, புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகோபால், 43. இவர் போலி ஆவணங்கள் வாயிலாக, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் சிக்கினார்.இவர்கள் நால்வரையும், கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி போலீசார், நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.