உத்திரமேரூர், : உத்திரமேரூர் பேரூராட்சியின் 18 வார்டுகளில், 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், புதிதாக அமைத்த ஒரு சில தெருக்களில் மட்டும், அத்தெருக்கான பெயரை குறிப்பிட்டு, பலகை வைக்கப்பட்டுள்ளது.மகாத்மாகாந்தி தெரு, சின்னநாரசம்பேட்டை, பெரியநாரசம்பேட்டை, கருணீகர் தெரு, தோட்டக்காரத்தெரு, வண்ணாரத்தெரு உட்பட பல தெருக்களுக்கு, இதுவரை பெயரை குறிப்பிட்டு பலகை வைக்கப்படவில்லை. அப்பகுதிக்கு வருவோர், விலாசம் தெரியாமல் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும், தெரு பெயர் பலகை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.