ஸ்ரீபெரும்புதுார் : குப்பை லாரிகளில் தார்பாய் மூடாததால், காற்றில் குப்பை பறந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.தாம்பரம் மாநகராட்சியில் நாளொன்றுக்கு 300 டன் குப்பை சேகரமாகின்றன. லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு, செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஆப்பூர் கிராமத்தில் கொட்டப்படுகின்றன.
தாம்பரத்தில் குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகள் வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை, ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கிறது. 20க்கும் மேற்பட்ட லாரிகள், நாளொன்றுக்கு ஐந்து முறைக்கு மேல் குப்பை லோடுகளுடன் படப்பை வழியே அதிவேகத்தில் செல்கின்றன.லாரிகளில் அளவுக்கு அதிகமாகவும், தார்பாய் போட்டு மூடாமலும் குப்பை எடுத்து செல்லப்படுகிறது. இதனால், லாரிகள் வேகமாக செல்லம்போது காற்றில் பறந்து, சாலையில் விழுகிறது.வாகன நெரிசல்களில் நிற்கும்போது, குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். தார்பாய் மூடி குப்பை எடுத்து செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.