ஏனாமில் 3 டன் அரிசி பறிமுதல் கடத்தலா என போலீஸ் விசாரணை | செய்திகள் | Dinamalar
ஏனாமில் 3 டன் அரிசி பறிமுதல் கடத்தலா என போலீஸ் விசாரணை
Added : ஜன 23, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி : ஏனாமில் இரண்டு மினி லாரிகளில் இருந்த 3 டன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் அரிசியா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏனாம் பிராந்தியம் ஏ.ஜி., சந்திப்பில் உள்ள தனியார் ரைஸ் மில் அருகே நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வன், சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்

அங்கு சந்தேகத்திடமாக நின்றிருந்த இரண்டு மினி லாரிகளை போலீசார் சோதனையிட்டனர். ஒரு லாரியில் 58 அரிசி மூட்டைகளும், மற்றொரு மினி லாரியில் 16 அரிசி மூட்டைகள் என மொத்தம் 3 டன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஆனல் யாரும் உரிமை கொண்டாட வரவில்லை.இது கடத்தல் அரிசியாக இருக்கலாம் என கருதி, இரண்டு மினி லாரிகளையும் கைப்பற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.மினி லாரிகள் யாருக்கு சொந்தமானவை என மேற்கொண்டு விசாரிக்கின்றனர். மேல் விசாரணைக்காக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X