வில்லியனுார் : வில்லியனுார் அருகே பணம் வைத்து சூதாடிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வில்லியனுார் அருகே உள்ள அகரம் ஐயனார் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் நேற்று மாலை 6.௦௦ மணி அளவில் அகரம் ஐயனார் கோவில் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு பணம் வைத்து சூதாடிய மூவரை பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் அகரம் கிராமத்தை சேர்ந்த பிரபு,37, ஏழுமலை,47, முத்தமிழ்,37, என தெரியவந்தது.மூவர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து ரூ.750 பணத்தை பறிமுதல் செய்தனர்.