காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், வடக்கு மாட வீதியில் வசிப்பவர் சுதர்சிங், 38. அவரது மனைவி பப்ளிதேவி, 35.வட மாநிலமான உ.பி.,யைச் சேர்ந்த இவர்கள், காஞ்சிபுரத்தில் பானி பூரி வியாபாரம் செய்து வந்தனர். பானி பூரி வியாபாரத்தை முடித்து, தினம் இரவு 11:00 மணிக்கு, சுதர்சிங் வீட்டுக்கு செல்வார். சில நாட்களாக, கணவன் - மனைவி இடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல், வீட்டுக்கு சென்று வெளி அறையில் சுதர்சிங் துாங்கினார். மனைவி உள் அறையில் துாங்கியுள்ளார்.காலையில் நீண்ட நேரமாகியும் மனைவி எழவில்லை என்பதால், ஜன்னலை திறந்து பார்த்த போது, பப்ளிதேவி துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.தகவல் அறிந்த சிவ காஞ்சி போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மனைவி தற்கொலை குறித்து, கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.