நகர்ப்புற தேர்தல் அ.தி.மு.க.,வில் மனு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
நகர்ப்புற தேர்தல் அ.தி.மு.க.,வில் மனு
Added : ஜன 23, 2022 | |
Advertisement
 

கூடுவாஞ்சேரி : நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,வில் நேற்று, விருப்ப மனு பெறப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கும், நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், அ. தி.மு.க., சார்பில் விருப்ப மனு பெறப்படுகிறது.நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட துணை செயலர் சீனிவாசன், மேற்கு மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில், தேர்தல் பொறுப்பாளர்கள் மாவட்ட கவுன்சிலர் கஜேந்திரன், இளைஞர் அணி மாவட்ட செயலர் புருஷோத்தமன் ஆகியோர், கட்சியினரிடம் நேற்று, விருப்ப மனு பெற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X