காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நேற்று நிறைவு பெற்றது. கோவில் நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் முன் ஆழ்வார்கள் எழுந்தருளி பாராயணம் நடைபெற்றது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் போகி பண்டிகைக்கு முன், பகல் பத்து உற்சவமும். போகிக்கு பின், ராப்பத்து உற்சவமும் நடைபெறும். இந்த உற்சவத்தின் போது மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வரதர் முன் ஆழ்வார்கள் எழுந்தருள்வார்கள். பாராயணம் நடைபெறும்.அதே போல் ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள், பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.