காஞ்சிபுரம் ; கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கடத்தவிருந்த, 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை, தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் இருந்து கன்டெய்னர் லாரியில், குட்கா கடத்தி செல்வதாக, காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தாலுகா போலீசார், வெள்ளக்கேட் அருகில் தாமரைதாங்கல் என்ற இடத்தில் சோதனை செய்தனர். அப்போது லாரியில் இருந்து இரு வேன்களில் குட்கா மாற்றி கொண்டிருந்தனர்.போலீசாரை பார்த்ததும் மற்றவர்கள் தப்பினர். லாரி ஓட்டுனர் சசிகுமார், மற்றொருவர் பழனி இருவரையும் பிடித்தனர்.விசாரணைக்கு பின், அங்குள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை செய்த போது 13 மூட்டைகள் குட்கா இருப்பது தெரிய வந்தது. மொத்தம், 120 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவற்றின் மதிப்பு 23 லட்சம் ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.