4,600 படுக்கைகளில், வெறும் 72 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
06:34

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாள்தோறும் 700க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 4,600 படுக்கைகளில், வெறும் 72 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும், ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவில் இருப்பதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழக அரசு விதித்து வருகிறது.



அரசின் விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பின்பற்றி வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்ததாக தெரியவில்லை.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஒன்றாம் தேதி, 234 பேருக்கு பாதிப்பு என்ற எண்ணிக்கை, நாள்தோறும் அதிகரித்து, ஒரு நாளைக்கே 700 முதல் 800 பேருக்கு தொற்று ஏற்படுகிறது.

நேற்றைய தொற்று பாதிப்பு 700க்கும் மேல் பதிவானது.மாவட்டத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள், ஆக்சிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள் என, பல்வேறு வசதிகள் தயார் நிலையில் உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொத்தம் ஆக்சிஜன், ஐ.சி.யூ., சாதாரண படுக்கைகள் உட்பட, 4,600 படுக்கை வசதிகள் உள்ளன. வீட்டிலிருந்தே சிகிச்சைஇதில், 72 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதமுள்ள, 4,528 படுக்கைகள் காலியாக உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இது 98 சதவீதம் ஆகும்.இன்றைய தேதிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவதால், படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பவில்லை.கடந்தாண்டு இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல், உயிர்பலி, படுக்கை கிடைக்காமல் அவதி போன்ற பிரச்னைகள், தற்போது பெரிதாக எழாதது ஆறுதல் அளிக்கிறது.மாவட்டத்தில், வருவாய் துறை, போலீஸ், பேரூராட்சி துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி துறை, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆகிய துறையினர், பொது இடங்களில் முக கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்கு, அபராதம் விதித்து வருகின்றனர்.அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி, முக கவசம் அணியாமல் இருந்தோரிடம் 17.60 லட்சம் ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதோரிடம், 1.19 லட்சம் ரூபாயும், பொது கூட்டங்களில் விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால், 90 ஆயிரம் ரூபாயும் இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி நிறைய பேர் செலுத்தவில்லை. அவர்களை தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி வருகிறோம். அதேபோல், ஆக்சிஜன் படுக்கைளை உரிய நோயாளிகளுக்கு வழங்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, செயல்பட்டு வருகிறோம். ஆக்சிஜன் இருப்பு போதிய அளவில் உள்ளது.மா.ஆர்த்தி,கலெக்டர், காஞ்சிபுரம்

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X