மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.,வின் சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
06:37

சிதம்பரம், : ஏழை பெண்களை நம்ப வைத்து தி.மு.க., அரசு ஏமாற்றுகிறது என சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.தொடர் மழையால் பாதித்த டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி சிதம்பரத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்.ஏ., அருள், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் சுந்தர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, ஒன்றிய செயலாளர் ராசாங்கம், சுந்தரமூர்த்தி, கருப்பன், விநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர். சண்முகம் நன்றி கூறினார்.மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில், கடந்த ஆட்சியில் ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தோம். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு தற்போதைய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

போலியாக வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.நாங்கள் பொங்கல் தொகுப்போடு ரூ.2,500 வழங்கிய போது, நாங்கள் வந்தால் ரூ.5,000 தருவோம் என கூறி ஏழை மக்களை வஞ்சித்து ஏமாற்றுகின்றனர். பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ரூ. 500 கோடி ஊழல் என எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டிற்கு முதல்வர் மவுனமாக உள்ளார்.சிதம்பரம் ராஜா முத்தையா கல்லுாரி மருத்துவமனை சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வந்தும் டாக்டர்கள் நியமனம் செய்ய வில்லை. ஏழை பெண்களுக்கு ரூ.1000 தருவதாக கூறி, எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி வருவதே தி.மு.க., அரசின் சாதனை.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X