திருத்தணி அம்மன் கோவிலில் 3 சவரன் தங்க தாலி சரடு மற்றும் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
06:40

திருத்தணி : திருத்தணி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த, 3 சவரன் தங்க தாலி சரடு மற்றும் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.திருத்தணி, பழைய பஜார் தெருவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.



இக்கோவில், நேற்று முன்தினம் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து வைத்து, இரவு 8:00 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றார்.நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, மூலவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கதாலிச்சரடு, கவரிங் தங்க கீரிடம் மற்றும் கோவில் உண்டியலை திருடிச் சென்றனர்.மேலும், அதே மர்ம நபர்கள், கோவில் அருகில் உள்ள வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர். வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால், ஆத்திரத்தில், வாகனத்தை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.மேலும், கோவிலில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த பழமையான வெள்ளி சிலைகள், வெண்கல சிலைகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களிடம் இருந்து தப்பியது.பழைய பஜார் தெருவில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறும், மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும்.அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு மக்கள் அதிகளவில் இந்த தெரு வழியாக தான் செல்கின்றனர்.

இப்படி மக்கள் நடமாட்டம் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நகை, உண்டியல் திருடு போன சம்பவத்தால் திருத்தணி நகர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து, கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரையடுத்து, திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X