கடலுார் தொற்று பாதிப்பு 69 ஆயிரத்தை கடந்தது | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலுார் தொற்று பாதிப்பு 69 ஆயிரத்தை கடந்தது
Added : ஜன 23, 2022 | |
Advertisement
 

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 222 ஆனது. கடலுார் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்து 222 ஆனது. நேற்று 339 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 273 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,603 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 468 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 878 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. பரங்கிப்பேட்டைபரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, வட்டார மருத்துவ அலுவலர் அமுதா, கிள்ளை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள், புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 டாக்டர்கள், லேப் டெக்னீஷியன் 1, அலுவலக பணியாளர் 1 உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும்பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் தனியார் அனல் மின் நிலையத்தில் பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்கள் 6 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X