கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு ஊழியர் குடியிருப்புகள் கட்டக்கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட முதல் மாநாடு கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி வரவேற்றார்.மாநில துணைத் தலைவர் திருவேரங்கன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ரங்கநாதன் அறிக்கை வாசித்தனர்.பல்வேறு சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஜார்ஜ் வாஷிங்டன், ஆனந்தகிருஷ்ணன், ரஹீம், பாலசுப்ரமணியன், மகாலிங்கம், ரவி, வேலு, பிரபாகரன், சாமிதுரை, காஞ்சனா மேரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மாநில பொதுச் செயலாளர் பாரி, ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணசாமி, ஆரோக்கியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் சுப்ரமணியன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து ஓய்வு ஆணை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 2 மற்றும் 3ம் தேதி அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது.ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கள்ளக்குறிச்சி நகரில் ரிங் ரோடு அமைக்க வேண்டும். அரசு அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.