விழுப்புரம் : 'நம்மை காக்கும் இன்னுயிர் காப்போம்' திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் முட்டத்துாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை தலைமை தாங்கினார். சாலை விபத்துகளில் பாதிப்போருக்கு இந்த திட்டம் எந்தளவு உறுதுணையாக உள்ளது என்பது குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்ற துாய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. கிராம மக்கள், அங்கு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பரிசோதனை கொண்டனர். ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.