திருவெண்ணெய்நல்லுார் : மகளைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகள் சங்கவி, 20; பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 20ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.