திருவெண்ணெய்நல்லுாரில் வளர்ச்சிப் பணி: கலெக்டர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
08:08

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் முதல் ஏனாதிமங்கலம் வரை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக நபார்டு திட்டத்தின் கீழ் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மேம்பாலம் பணி தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இதையெடுத்து சின்னசெவலை - மழவராயநல்லுார் செல்லும் சாலையில் பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலத்தை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்க உத்தரவிட்டார்.பின், டி.கொணலவாடி முதல் அருங்குறுக்கை வரை செல்லும் கெடிலம்

ஆற்றில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணி மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்த கால அளவிற்குள் பணியை முடிக்க வேண்டும். பணியில் சுணக்கம் காட்டினால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.திட்ட இயக்குனர் சங்கர், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் சுந்தர், துணை இயக்குனர் பொற்கொடி, உதவி கோட்ட பொறியாளர் மகேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வீரசிவாஜி, பி.டி.ஓ., முபாரக் அலிபேக், தாசில்தார் பாஸ்கரதாஸ், சேர்மன் ஓம்சிவசக்திவேல் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X