அவிநாசி:அத்திக்கடவு -- அவிநாசிதிட்டத்தில், 1,200 விடுபட்ட குளம், குட்டைகளைஇணைக்க, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்,1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் திட்டமிடப்பட்டு, 1,652 கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு- அவிநாசி திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை, 93 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என, ஆங்காங்கே உள்ள கிராம மக்களும், அத்திக்கடவு -- அவிநாசி திட்ட போராட்டக் குழுவினரும் கூறி வருகின்றனர். கிராமங்கள் தோறும் கூட்டம் நடத்தி, கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.திட்டப்பணியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, 1,200 குளம், குட்டைகள் குறித்த முதற்கட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, அரசாணை வெளியிடப்பட வேண்டும். தற்போது நடந்து வரும் திட்டப்பணி நிறைவு பெற்றால் தான், இரண்டாம் கட்டப்பணி துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்' என்றனர்.