ஊத்துக்குளி; வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஊத்துக்குளி; வேஸ்ட் குடோனில் பயங்கர தீ விபத்து
Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி சேடர்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. அதே பகுதியில் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார்.


இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொழிலாளர்கள் குடோனை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இச்சூழலில், நள்ளிரவு 1:00 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி எரிய ஆரம்பித்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குடோன் முழுவதும் வேஸ்ட் துணிகள் அதிகம் இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது. குடோன் முழுவதும் தீ பரவிய காரணத்தால், தற்போது வரை தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X