* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ மல்லிகை பூ, 2,852 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை கிலோ, 1,720 ரூபாய், காக்கடா, 850, செண்டுமல்லி, 30, கோழிக்கொண்டை, 43, ஜாதி முல்லை, 750, சம்பங்கி, 25, கனகாம்பரம், 410, அரளி பூ, 70, துளசி, 30, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* சித்தோடு சொசைட்டி வெல்லம் மார்க்கெட்டில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,000 ரூபாய் முதல், 1,050 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 980 ரூபாய் முதல், 1,050 ரூபாய்க்கு ஏலம் போனது. அச்சு வெல்லம், 960 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,000 ரூபாய் முதல், 1,150 ரூபாய் வரை விற்பனையானது. பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததால், நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம், 90 ரூபாய் வரை மூட்டைக்கு விலை குறைந்தது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காயம் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 8,?72 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 24.15 ரூபாய் முதல், 29.19 ரூபாய் வரை, 83 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடந்தது. இதில் நாட்டு காளை மாடு, 85 - 97 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு, 43 - 61 ஆயிரம் ரூபாய்; பர்கூர் காளை, 35 - 42 ஆயிரம் ரூபாய்; பர்கூர் பசு, 20 - 25 ஆயிரம் ரூபாய்; சிந்து மாடு, 30 - 40 ஆயிரம் ரூபாய்; ஜெர்சி பசு, 25 - 37 ரூபாய்; எருமை 20 - 30 ஆயிரம் ரூபாய்; கன்றுகுட்டி, 10 - 12 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 5,286 மூட்டைகளில், 2.57 லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 83.20 ரூபாய் முதல், 89.10 ரூபாய் வரை; இரண்டாம் தரம், 59.93 ரூபாய் முதல், 85.26 ரூபாய் வரை, 2.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரம், 27 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 380, தேன்வாழை, 400, செவ்வாழை, 510, பச்சைநாடான், 290, ரஸ்த்தாளி, 390, ரொபஸ்டா, 300, மொந்தன், 330 ரூபாய்க்கும் விலைபோனது. தேங்காய் ஏலத்தில், ஒரு காய் குறைந்தபட்சம் ஒன்பது ரூபாய், அதிகபட்சம், 18.60 ரூபாய்க்கும் விற்பனையானதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.