கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா, மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா, கடந்த, 13ல் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முறை பூசாரிகள், கோவில் சேவகர்கள் மற்றும் வீரமக்கள் என, 60 பேர் மட்டுமே குண்டம் இறங்கினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த, 14, 15, 16, 21 ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு இடைப்பட்ட நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நடப்பாண்டு குண்டம் விழா நிறைவாக, நேற்றிரவு, 7:00 மணிக்கு மறுபூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. பின், அம்மன் பூதவாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தை வலம் வந்தார். நிகழ்வில் திருவிழா முகமைதாரர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என, 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மறுபூஜையுடன் நடப்பாண்டு குண்டம் விழா நிறைவு பெற்றதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.