காயகல்ப விருதுக்காக ஜி.எச்.,ல் ஆய்வு | ஈரோடு செய்திகள் | Dinamalar
காயகல்ப விருதுக்காக ஜி.எச்.,ல் ஆய்வு
Added : ஜன 23, 2022 | |
Advertisement
 

ஈரோடு: காயகல்ப விருதுக்காக, ஈரோடு அரசு மருத்துவமனையில், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசின் காயகல்ப திட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் தூய்மை மற்றும் தரமான மருத்துவ சேவையுடன் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து, மதிப்பெண் அளிக்கின்றனர். இதில் அதிக மதிப்பெண் பெறும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய விருது, ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இதற்காக ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை, சிகிச்சை முறை, குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை, தூய்மை பணி, டாக்டர்கள் வருகை குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆர்.எம்.ஓ., கவிதா உடனிருந்தனர். மருத்துவ குழுவினர் கூறியதாவது: இவ்விருதுக்காக, தமிழகத்தில், 25 அரசு மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறும் மருத்துவமனைக்கு, தேசிய விருதுடன் முதலிடம் பெற்றால், 50 லட்சம் ரூபாய், இரண்டாமிடத்துக்கு, 30 லட்சம் ரூபாய், மூன்றாமிடத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X