சேலம்: சேலம், தர்மபுரி வழியே இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக, 'ஏசி' பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. மைசூர் - மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ், மைசூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்களில், நேற்று முதல் ஒரு மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மறுமார்க்க ரயில்களிலும், இன்று முதல் ஒரு மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி இணைக்கப்படுகிறது. யஷ்வந்த்பூர் - கொச்சுவேலி கரீப் ரதம் எக்ஸ்பிரஸில், இன்று முதல், ஒரு மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்க்க ரயிலில், நாளை முதல் இணைக்கப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.